மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

 

தொண்டி, பிப்.8: தொண்டியில் மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுகாதார அம்சங்கள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. உயிர் பாதுகாப்பு பொருள்கள் வழங்கப்பட்டது. உயிர் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுகாதார அம்சங்கள் குறித்த திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சி தூத்துக்குடி, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் தொண்டியில் நடைபெற்றது.

தொழில்நுட்பம் குறித்து தூத்துக்குடி துணை இயக்குநர் டாக்டர் ஷஸ்ஸி, மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வினோத், ரவீந்திரன், அருள் ராஜ், மீன்பிடி படகுகளில் மூலப்பொருட்களைக் கையாளும் போது தனிப்பட்ட சுகாதார அம்சங்கள் குறித்து விளக்கினர். மீன் வள ஆய்வாளர் அபுதாஹிர், கடல் மீன்பிடி சட்ட அமலாக்கத் துறை எஸ்.ஐ.குருநாதன், மேற்பார்வையாளர் கணேசன் கடலில் ஆபத்து ஏற்படும் போது எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து பேசினர். மேலும் மீனவர்களுக்கு தூத்துக்குடி துணை இயக்குனர் டாக்டர் ஷஸ்ஸி உதவிப் பொருட்களை வழங்கினார்.

Related posts

சங்கரன்கோவில் நகராட்சியில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு

அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

சேரன்மகாதேவியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் உவரி கடலில் விஜர்சனம்