தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படை: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ராமேஸ்வரத்தில் போராட்டம்

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 8 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதில் அவர்களது விசை படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் இரண்டு படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் வேதனையில் உள்ள ராமேஸ்வர மீனவர்கள் 17 மீனவர்களையும், அவர்களது விசை படகுகளுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்த அறிவிப்பால் இன்று ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கின்றனர்.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.83 கோடி உண்டியல் காணிக்கை

3 சட்டங்களை ஆராய நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

இன்றைய நாள் எனக்கானது: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி