மீன்துறை ஆய்வாளர் பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

 

Related posts

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை, காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

காவல்துறை பளுதூக்கும் குழு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை பாராட்டினார் காவல்துறை தலைமை இயக்குநர்

சொத்துவரி உயர்வு என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் உயர்த்தப்பட்டது: அமைச்சர் சிவசங்கர்