நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேருரை ‘நார்மன் காலோவே’ விருது பெறும் முதல் இந்தியர்: அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் அமர் அகர்வால் சாதனை

சென்னை: இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் அமர் அகர்வால் கடந்த 19ம் தேதி சிறப்பு பேருரை ஆற்றினார்,அதில், திசு பசையை பயன்படுத்தி கண்ணுக்குள் லென்ஸ்களை பொருத்துகிற குளூட் ஐஒஎல் போன்ற புதிய சிகிச்சை உத்திகள் குறித்து விளக்கினார். 25 மைக்ரான் அளவே கொண்ட ஒரு மெல்லிய கருவிழி உறுப்புமாற்று புதிய சிகிச்சையில் நவீன உத்தியான ஃப்ரீ டெசிமேட்ஸ் எண்டோடெலியல் கெரடோபிளாஸ்டி (உள் படல கருவிழியமைப்பு) குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த பேருரை நிகழ்த்தியதை தொடர்ந்து, அவருக்கு நார்மன் காலோவே விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுதொடர்பாக அமர் அகர்வால் கூறியதாவது: நார்மன் காலோவே புகழ்பெற்ற ஒரு பிரிட்டிஷ் கண் மருத்துவவியல் நிபுணர், கண் மருத்துவவியல் செயல்முறையில் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்துவதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர் என போற்றப்படுகிறார்.

அவரது பெயரில் நிறுவப்பட்ட இந்த பேருரையை வழங்குவதற்கு வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருப்பதை ஒரு சிறந்த கவுரவமாக கருதுகிறேன். அவரது பெயரில் வழங்கப்படும் விருதை பெறுவதும் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மிகப்பெரிய அங்கீகாரங்களை பெருகின்ற முதல் இந்தியர் என்ற கவுரவத்தை பெறுவது இன்னும் அதிக பெருமை தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

தில்லைநகர் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு நடிகர் ரா.சரத்குமார் இரங்கல்..!!