மணிப்பூரில் தொடரும் துப்பாக்கி சூடு

இம்பால்: மணிப்பூரில் நேற்று முன்தினம் நள்ளிரவும் கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. மேலும் வாகனங்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.  மணிப்பூர் மாநிலத்தில் கங்லா கோட்டை அருகே மகாபலி சாலையில் சுமார் 200 பேர் கொண்ட கும்பல் திரண்டது. அந்த கும்பல் அங்கிருந்த இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்தது. போலீசாரிடம் இருந்து ஆயதங்களை பறிக்க முயற்சித்தனர். இதன் காரணமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் யாரும் காயமடையவில்லை.

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் யாங்காங்போக்பி அருகே நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் மே 3ம் தேதியில் இருந்து இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்றம்,’ பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளின பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், மொபைல் போன்களுக்கு இணைய சேவை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related posts

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்