நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து


நொய்டா : நொய்டாவில் லாஜிக் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து வணிக வளாகத்தில் இருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். வணிக வளாகத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நொய்டாவில் உள்ள வேவ் சிட்டி சென்டரில் உள்ள லாஜிக் மாலில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. நொய்டா, செக்டார் 32ல் உள்ள லாஜிக்ஸ் மாலின் முதல் தளத்தில் அமைந்துள்ள அடிடாஸ் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. லாஜிக்ஸ் மாலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அதிக அளவில் புகை மூட்டமாக காணப்பட்டது. கடையின் கண்ணாடியை உடைத்து மக்களை வெளியே எடுத்தனர்.

எனினும் இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும், எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்