செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ: பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

திருமலை: செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள மேட்டுகுடாவில் நேற்று ஒரு ரயிலில் 2 பெட்டிகள் சுத்தம் செய்வதற்காக கொண்டு சென்று மீண்டும் செகந்திராபாத் ரயில் நிலைய பிளாட்பாரத்துக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது இரண்டு பெட்டிகளில் இருந்து கரும்புகை வெளியேறியபடி திடீரென தீ பிடித்தது. இதைபார்த்த ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடனடியாக தீயணைப்பு துறையினரை வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சமையல் கேன்டின் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பெட்டியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் ரயில் நிலையம் வெளியே வரை இருந்த பயணிகள் கரும்புகை பார்த்து பதற்றம் அடைந்தனர். ரயில் விபத்து குறித்து அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை