மரக்கடையில் பயங்கர தீ; ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

தஞ்சை: தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் தஞ்சை-நாகை சாலை தொல்காப்பியர் சதுக்கம் அருகே மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு தேக்கு மரத்தினால் ஆன பீரோ, கட்டில், மேஜை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் நேற்றிரவு வேலை முடிந்து அசோக் வீட்டிற்கு சென்றார். அப்போது இரவு 10.45 மணியளவில் திடீரென மரக்கடையில் உள்ள பொருட்கள் தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் மரப்பொருட்களுடன் சேர்ந்து கடை முழுவதும் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது