கிண்டி – பரங்கிமலை இடையே தண்டவாளம் அருகே தீ ரயில் சேவை பாதிப்பு

ஆலந்தூர்: கிண்டி – பரங்கிமலை ரயில் நிலையம் இடையே தண்டவாளம் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ரயில்கள் நிறுத்தப்பட்டன. கிண்டி -பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை ஒட்டியுள்ள காலிமனையில் வளர்ந்துளள முட்புதர் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில்கள் பரங்கிமலை ரயில்நிலையம அருகே சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.

தகவலறிந்த மாம்பலம் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள ஒரு தனியார் நிறுவன கட்டிடத்தின் மேலே ஏறி தொழிலாளர்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காய்ந்து கிடந்த சருகுகள் அதிகளவில் இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் கிண்டி தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். பின்னர் மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. சிகரெட் புகைத்துவிட்டு யாரேனும் அதை வீசிச் சென்றதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடிப்பாக்கம் கீழ்கட்டளை, பூபதி நகரில் ரப்பர் மோல்டிங் கம்பெனி நடத்தி வருபவர் கிரிதரன். அங்கு நேற்று மின் கசிவின் காரணமாக கரும்புகையுடன் தீப் பற்றி எரிந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடிச்சென்று, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் தாம்பரம், மேடவாக்கம் பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் கம்பெனியில் இருந்த தளவாட பொருட்கள், ரப்பர், பிளாஸ்டிக் கேனுடன் வைத்திருந்த மிஷின் எண்ணெய் மற்றும் அட்டை பெட்டிகள் எரிந்து கருகின.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்