நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதன் யாதவ் நீதிமன்ற காவல் வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் தேவநாதன் உட்பட 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 3 பேரும் நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, தேவநாதன் யாதவ் உட்பட 3 பேரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 27ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மூவரும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்