திருப்பூர், கிருஷ்ணகிரியில் நீரில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பூரை சேர்ந்த இனியவன் (12) மற்றும் சந்துரு (12) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி சேர்ந்த புவனா (11) மற்றும் வினோத் (7) ஆகியோர் எம்.பள்ளத்தூர் ஏரியில் குளித்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், முல்லைவாடி கிராமம், வடக்கு காடு, சிலோன் காலனியைச் சேர்ந்த பிரவீன் என்ற கல்லூரி மாணவர், தனது நண்பர்களுடன் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் கிராமம், ஜேடர்பாளையம் படுகை அணைப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த 5 பேரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு