பைனலில் ஒலிவியா

குவாதலஜாரா: மெக்சிகோவில் நடைபெறும் குவாதலஜாரா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட ஆஸ்திரேலிய வீராங்கனை ஒலிவியா கடெக்கி தகுதி பெற்றார். அரையிறுதியில் கொலம்பியாவின் கமிலா ஒசாரியோவுடன் (22 வயது, 80வது ரேங்க்) மோதிய ஒலிவியா கடெக்கி (22 வயது, 82வது ரேங்க்) 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.

இப்போட்டி 1 மணி, 19 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் போலந்தின் மெக்தலனா ஃபிரெக் (26 வயது, 43வது ரேங்க்) 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் நட்சத்திரம் கரோலினா கார்சியாவை (30 வயது, 30வது ரேங்க்) வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 6 நிமிடத்துக்கு நீடித்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பைனலில் ஒலிவியா – ஃபிரெக் மோதுகின்றனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை