சினிமா தயாரிப்பாளரை வேனில் கடத்திய கும்பல்

சத்தியமங்கலம்: நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த சினிமா தயாரிப்பாளரை வேனில் கடத்தி சென்ற சத்தியை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத் (36). கன்னடம், தமிழ் மற்றும் மலையாள படங்களின் விநியோகஸ்தர். தமிழில் பன்-டீ, நீ என் பூஜா லட்சுமி மற்றும் ஏராளமான மலையாள படங்களை தயாரித்துள்ளார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த கரிகாலன் (45), கார்த்திகேயன் (23) ஆகியோருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணபிரசாத் நண்பர்கள் 2 பேரையும் சினிமாவில் நடிக்கை வைப்பதாக உறுதியளித்தார்.

அதன்படி, அவர்களிடம் ரூ.2.50 லட்சம் பெற்றுள்ளார். நாட்கள் கடந்த பின்னரும் நடிக்க வாய்ப்பு தரவில்லை. இதனால், ஏமாற்றப்பட்டோம் என்று நினைத்த கரிகாலன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் பணத்தை திருப்பி கேட்டனர்.
ஆனால், கிருஷ்ண பிரசாத் பணத்தை திருப்பி தரவில்லை என்று தெரிகிறது. இதனால், கிருஷ்ண பிரசாத்தை கடத்த திட்டமிட்டனர். அதன்படி, அருண் என்ற நபரை கிருஷ்ண பிரசாத்திடம் அனுப்பினர். அவர் நல்ல கதை உள்ளது. அதை உங்களிடம் கூற வேண்டும் என்று கிருஷ்ண பிரசாத்திடம் கூறினார்.

அதன்படி, நேற்று கிருஷ்ணகிரி நகர் பகுதியில் கிருஷ்ண பிரசாத், அருணிடம் கதை கேட்டபடியே நடந்து சென்றார். அப்போது வேனில் கரிகாலன், கார்த்திகேயன் மற்றும் சத்தி, கொத்தமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (31) ஆகியோர் வந்தனர். திடீரென கிருஷ்ண பிரசாத்தை வேனில் கடத்திச்சென்றனர். இதுகுறித்து சத்தி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் வடக்குப்பேட்டை வாரச்சந்தை பஸ் நிறுத்தம் அருகே தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது, கிருஷ்ண பிரசாத்தை கடத்திய வேன் வந்தது. போலீசார் வேனை மடக்கிப்பிடித்து கிருஷ்ண பிரசாத்தை மீட்டனர். மற்ற 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் என்பதால் அந்த போலீசாரும் சத்தி விரைந்தனர்.

Related posts

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல்

அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது