திரைப்பட இயக்குனர் மோகன் ஜி-யை கைது செய்தது காவல்துறை

சென்னை: திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜியை போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக பேட்டியளித்த திரைப்பட இயக்குனர் மோகன் ஜி-யை சென்னை காசிமேடு இல்லத்தில் காவல்துறை கைது செய்தது.

பிரபல தமிழ் பட இயக்குனர் மோகன் ஜி, இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்த திரைப்படங்களில் பெண் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும், நாடகக் காதல்களையும் விமர்சித்து படத்தை இயக்கியுள்ளார். இவரது திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து நிலையில் தொடர்ந்து பாமக ஆதரவாளராகவே தன்னை காட்டிக் கொண்டு வந்தார். இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜியை போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள பதிவில், சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் ஜி அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை.

சமீபத்தில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்து தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்தார். மேலும், பழனி பஞ்சாமிருதத்தில் சர்ச்சைக்குரிய பொருள் ஒன்று இருப்பதாகவும் பேசி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிர்ச்சி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

ஏற்கனவே அமைச்சர் சேகர் பாபு பழனியில் பஞ்சாமிருதத்திற்கு ஆவின் நெய் மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால், உரிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதனிடையே, மோகன் ஜியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பழனியில் காவல் நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இயக்குனர் மோகன்ஜியை வீடியோ பதிவு ஒன்றில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இருந்த போதும் கைதுக்கான முழுமையான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

 

Related posts

தென்சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீரை தடுக்க என்ன வழி?: ஐகோர்ட் கிளை கேள்வி

குப்பை எரிக்க தடை கோரிய மனு: ஆட்சியர் பதிலளிக்க ஆணை