எனது தலைக்கு ரூ1 கோடி அறிவித்த தெலுங்கு தேசம் நிர்வாகி மீது நடவடிக்கை: டிஜிபியிடம் திரைப்பட இயக்குனர் புகார்

திருமலை: எனது தலைக்கு ₹1 கோடி அறிவித்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா புகார் மனு அளித்தார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் பாத யாத்திரை மேற்கொண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தது குறித்தும் அதற்கடுத்து மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல்வராக நிர்வகித்து வருவது குறித்தும் ‘வியூகம்’ என்ற பெயரில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா திரைப்படம் தயாரித்துள்ளார். இதில் முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் கதாபாத்திரமும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தேர்தலை மையமாக கொண்டு ஜெகன்மோகன் மீது அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையில் சந்திரபாபுவையும், பவன்கல்யாணையும் வில்லனாக சித்தரித்து சினிமா எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி கோலிகிபுடி னிவாஸ் என்பவர் பேசுகையில், ‘ராம்கோபால் வர்மா தலையை துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு ₹1 கோடி பரிசு தருகிறேன்’ என அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இயக்குனர் ராம்கோபால்வர்மா அலுவலகம் முன்பு அவரது படத்தை தீயிட்டு கொளுத்தி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆந்திர மாநில டிஜிபி ராஜேந்திரனிடம் திரைப்பட இயக்குனர் ராம்கோபால்வர்மா மற்றும் தயாரிப்பாளர் தாசரிகிரண்குமார் ஆகியோர் நேற்று அளித்த மனுவில், எனது தலைக்கு ₹1 கோடி அறிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு