சண்டை போட வேண்டாம், பேசி தீர்த்துக் கொள்ளலாம்: தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்பு பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்நிவாஸில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரச்னை என்றால் நேரில் வந்து பேசுங்கள், ஆரோக்கியமான சூழல் வேண்டும். தெலங்கானாவில் மசோதாவுக்கு கையெழுத்து போடாததால் நீதிமன்றம் சென்றார்கள். இது அந்தந்த மாநில பிரச்னை. தமிழக அரசின் மசோதாவில் கவர்னர் கையெழுத்து போடாதது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

புதுச்சேரியில் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், கவர்னர் இந்த இணைப்பு சரியாக இருக்கவேண்டும். எங்கு குறை இருந்தாலும் சரி செய்யலாம். அதிகாரிகளால் முதல்வருக்கும், எனக்கும் சங்கடங்கள் இருக்கலாம். அது சரிசெய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும்.தமிழகத்திலும் முதல்வரும், கவர்னரும் உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டையே போட வேண்டியதில்லை. தெலங்கானாவிலும் இதை சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்