பாசிச சக்திகளின் அப்பட்டமான அதிகார அத்துமீறலை தடுக்க கடுமையாக பாடுபடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு: அரசியல் சட்டத்தின் காவலரணான உச்ச நீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த பத்தாண்டுகளில், ஜனநாயக சிதைவையும், கூட்டாட்சியின் மறைவையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முன் கூர்முனைகளை இடும் தவறான சாகசங்களையும், பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த மரபுகள் கைவிடப்பட்டதையும் இந்திய மக்கள் கண்டு வருகின்றனர்.

2024 மக்களவை தேர்தல் மக்களாட்சியைக் காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் மிக முக்கியமானது. நமது புகழ்மிகு நாட்டை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் அப்பட்டமான அதிகார அத்துமீறலைத் தடுக்கக் கடுமையாகப் பாடுபடுவோம்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு