புயல் அச்சுறுத்தலால் பயணிகள் குறைவு: சென்னையில் 7 விமானம் ரத்து

சென்னை: மிக்ஜாம் புயல் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 28 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் நேற்று மாலை 6.10க்கு கவுகாத்தி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இரவு 7.15க்கு பெங்களூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், இரவு 9.10க்கு டெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள், மாலை 5.35க்கு பெங்களூரில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்,

மாலை 6.25க்கு பெங்களூரில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ், இரவு 8.20க்கு டெல்லியில் இருந்து வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ், இரவு 10.20க்கு விஜயவாடாவில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய 4 வருகை விமானங்கள் என மொத்தம் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பக்ரைன், துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், தோகா ஆகிய சர்வதேச விமானங்கள், மும்பை, அந்தமான், ஐதராபாத், டெல்லி, பெங்களூர், கோவா, கொல்கத்தா உள்ளிட்ட 16 புறப்பாடு விமானங்கள், மற்றும் 12 வருகை விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள் நேற்று ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டது.

* 118 ரயில்கள் ‘கேன்சல்’
மிக்ஜாம் புயல் காரணமாக வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 118 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள், மதுரை நிஜாமுதீன், சென்னை அகமதாபாத், மதுரை சண்டிகர், சென்னை சென்டரல் – கயா, புது டெல்லி புதுச்சேரி, ராமேஸ்வரம் பனாராஸ், சென்னை-கொல்கத்தா என பல்வேறு நகரங்களுக்க்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கான கட்டணம் தெற்கு ரயில்வே சார்பில் திரும்பி அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது