வெப்ப சலனத்தால் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும்

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது கோடைகாலம் தொடங்கி வெயில் மற்றும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் மாறுபட்டநிலையில் இருக்கிறது. ஈரோட்டில் அதிகபட்சமாக நேற்று வெயில் அளவு 102 டிகிரி இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், சேலம், திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால், ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டு இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 3ம் தேதியும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 100 டிகிரியை ஒட்டி இருக்கும்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு