காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் 3 நாட்கள் முன் உயிரிழப்பு: குடியாத்தத்தில் தலைமறைவாக இருந்த போலி மருத்துவர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்ததில் போலி பெண் மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற இளம்பெண் உயிரிழந்த நிலையில் தலைமறைவாக இருந்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர். குடியாத்ததை அடுத்துள்ள பிச்சனூர் பேட்டையை சேர்ந்த பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண் காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக காளியம்மன் பட்டியில் உள்ள பிரியா என்ற மருத்துவரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக சிகிச்சை பெற்றுள்ளார்.

ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் மூச்சு திணறலால் பிரியங்கா உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா சிகிச்சை பெற்ற மருத்துவர் போலி மருத்துவர் என்றும் அவரது சிகிச்சைக்கு பின்னரே உடல்நிலை மோசமாகி உயிரிழந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

இதை அடுத்து உயிரிழந்த இளம்பெண் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதிகாரிகள் சோதனைக்கு வருவதை முன்கூட்டியே அறிந்து மருத்துவர் பிரியா தப்பி சென்றுவிட்ட நிலையில் சுகாதாரத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் தேடுதலில் ஈடுபட்டு வந்த போலீசார் வேலூர் அருகே பிரியாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டிப்ளமோ நர்சிங் படித்து பாதியிலேயே படிப்பை கைவிட்டது தெரியவந்தது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்