பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் புதிய திட்டம்

சென்னை: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் வட மாவட்ட பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் புதிய திட்டமிட்டுள்ளது. வழக்கமாக, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப்பேருந்துகளை சிறப்புப் பேருந்துகளாக இயக்குவதால், ஊரகப் பகுதி மக்கள் பாதிப்படைவதால் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அதற்கு ஓட்டுநர், நடத்துநரை அரசே நியமித்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து குறிப்பிட்ட ஊர்களுக்கு எத்தனை நடை பேருந்து இயக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு கட்டணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை வருகிற 30ம தேதிக்குள் அகற்ற வேண்டும் : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவு!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு