ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில் 200 ஆடுகளை பலியிட்டு 15 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் கறி விருந்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி, கருத்தலக்கம்பட்டி, க.புதூரில் கருப்பசாமி வடகாட்டான் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவையொட்டி, நேற்று காலை கருப்பசாமி வடகாட்டான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் குழந்தை வரம் மற்றும் தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனுக்காக வழங்கப்பட்ட அரிசி மூட்டைகள், 200க்கும் மேற்பட்ட கிடாக்கள் மற்றும் பொருட்களை கொண்டு கறி விருந்து சமையல் நடந்தது.

இந்த கோயில் இருக்கும் பகுதிக்கும், கோயிலுக்கும் பெண்கள் வரக்கூடாது. இது, ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட விநோத திருவிழாவாகும். இவ்விழாவில் பிரசாதமாக அனைவருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது. இதில் சேத்தூர், அரவங்குறிச்சி, ந.புதுக்கோட்டை, சேத்தூர், பட்டிக்குளம், நல்லூர், குரும்பபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கறி விருந்து சாப்பிட்டனர். பக்தர்கள் கூறுகையில், ‘‘இந்த விழாவில் பிரசாதமாக வழங்கப்படும் கறி விருந்து சாப்பாட்டை ஆண்கள் மற்றும் 2 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் மட்டுமே சாப்பிட வேண்டும். பெண்கள் இவற்றை பயன்படுத்தக் கூடாது’’ என்றனர்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு