பெண் எஸ்.ஐ.,பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வு

 

சேலம், நவ.8: காவல்துறையில் காலியாக இருக்கும் எஸ்ஐ பணியிடங்களுக்கான முதல்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு நேற்று தொடங்கியது. சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் பெண்களுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சிப்பெற்ற 313 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 258 பேர் கலந்து கொண்டனர். 55பேர் தேர்வுக்கு வரவில்லை. இதில் சரக டிஐஜியும் தேர்வுக்குழு தலைவருமான ராஜேஸ்வரி தலைமையில் தேர்வுகள் தொடங்கியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் தேர்வர்களின் உயரம் அளவீடு செய்யப்பட்டது. அதன்பின்னர் 400மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இவை அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு இன்று (புதன்) நடக்கிறது. இதில் 100மீட்டர் ஓட்டம், கிரிக்கெட் பால் எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடக்கிறது. இதில் சூப்பர் செக் ஆபீசராக மாநகர கமிஷனர் விஜயகுமாரி, குழு உறுப்பினராக எஸ்பி அருண்கபிலன், ஏடிஎஸ்பி கண்ணன், ஏடிசி ரவிச்சந்திரன் ஆகியோர்
உள்ளனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி