பெண் போலீஸ் அதிகாரி மீது அவதூறு கோவை ஷர்மிளா மீது போலீஸ் வழக்குப்பதிவு: பஸ் ஓட்டி வீடியோ வெளியிட்டு பிரபலமானவர்

கோவை: கோவையில் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை பற்றி அவதூறு வீடியோ இன்ஸ்டாவில் வெளியிட்ட பஸ் பிரபலம் ஷர்மிளா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா (26). இவர் கோவையில் டவுன் பஸ் ஓட்டி பிரபலமானார். இவருக்கு நடிகர் கமல்ஹாசன் சொந்த செலவில் கார் வாங்கி கொடுத்திருந்தார். பஸ் ஓட்டுவதை நிறுத்திய ஷர்மிளா சில மாதங்களாக கார் ஓட்டி வந்தார். ‘ரைடர் ஷர்மிளா’ என்ற பெயரில் இவர் இன்ஸ்டா கிராமில் பல்வேறு பதிவுகளை போட்டு வந்தார். கடந்த 2ம் தேதி இவர் சத்தி ரோடு சங்கனூர் ரோட்டில் காரில் ‘நோ என்ட்ரி’யில் திரும்பி ‘யூ டர்ன்’ செய்ததாக தெரிகிறது.

இதை அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த எஸ்எஸ்ஐ ராஜேஸ்வரி கேட்டபோது தன்னிடம் மரியாதை இல்லாமல் பேசுவதாகவும், தான் ஒரு பிரபலம், என்னை தெரியாதா?, என்னிடம் இப்படி பேசலாமா? எனக் கேட்டு தகராறு செய்து ஷர்மிளா வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாவில் வெளியிட்டார். அதில், ‘‘இந்த போலீஸ் அதிகாரி பணம் வாங்குகிறார், போக்குவரத்தை கவனிப்பதில்லை’’ என்று கூறியிருந்தார். இந்த பதிவுக்கு சிலர் தகாத முறையில் கமெண்ட் பதிவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!