பெண் சார்பதிவாளர் படத்தை மார்பிங் செய்து அவதூறு: வாலிபர் கைது

சத்தியமங்கலம்:. ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சார்பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் ஐஸ்வர்யா, கடந்த 2ம் தேதி புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த கரிவரதராஜன் மற்றும் சாணார்பதி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து சம்பந்தம் இல்லாத ஆவணத்தை கொண்டு வந்து ரத்து செய்யுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை செய்து தர மறுத்ததால். எனது புகைப்படத்தை மார்பிங் செய்து முறைகேடாக பயன்படுத்தி அவதூறு பரப்பியுள்ளனர். இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சந்தோஷ் குமாரை (33) நேற்று கைது செய்தனர். கரிவரதராஜனை தேடி வருகின்றனர்.

Related posts

குமரி: சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியது

பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்: பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் பதிவு

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றாலத்தில் கார் பார்க்கிங் அதிக தொகைக்கு ஏலம்