ரூ.6.25 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக வசந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10ம் தேதி காலை பணி முடிந்து காரில் அவரது வீட்டுக்கு புறப்பட்டார். ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள அவரது வீட்டின் அருகே சென்றபோது, வசந்தியின் காரை திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது கணக்கில் வராத ரூ.3 லட்சம் மற்றும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இவை அனைத்தும் லஞ்சமாக பெற்ற பணம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே போக்குவரத்து துறை சார்பில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, ஆய்வாளர் வசந்தியை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் நேற்று உத்தரவிட்டார்.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்