கையை அறுத்துக்கொண்டு பெண் காவலர் தற்கொலை முயற்சி

சென்னை: மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் அரி கிரண் பிரசாத் தலைமையில், கடந்த வாரம் நீதிமன்ற பணிகளை மேற்கொள்ளும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், அபிராமபுரம் காவல் நிலைய வளாகத்தில் நடந்தது. இதில், ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ்அவுஸ், அபிராமபுரம், மெரினா, பட்டினப்பாக்கம், ஜாம்பஜார், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் நீதிமன்ற பணிகளை கவனிக்கும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, நீதிமன்ற பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, நீதிமன்ற பணிகளை பராமரிக்கும் நோட்டு புத்தகத்தை துணை கமிஷனர் சரிபார்த்துள்ளார். அதில், ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் லாவண்யா, நீதிமன்ற பணிகளுக்கான நோட்டு புத்தகத்தை பராமரிக்காமல், டைரியில் நீதிமன்ற பணிகள் குறித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து 5 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தவறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை கமிஷனர் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தலைமை காலவர் லாவண்யா, நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலக எழுத்தரை செல்போனில் தொடர்பு கொண்டு, நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன், என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லாவண்யாவுடன் பணியாற்றும் சக பெண் காவலர்களிடம் நேரில் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அதன்படி சக போலீசார் வந்து பார்த்த போது, லாவண்யா தனது கையை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனே, அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

மதுரை அருகே உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் காயம்

செப் 12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை