ஊட்டி ஓடைகளில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது: கலெக்டர் தகவல்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள சாண்டிநல்லா வள்ளுவர் நகர் பகுதி ஓடையில் 50 ஆயிரம் சாதா கெண்டை மீன் குஞ்சுகள் விடப்பட்டன. நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேயுள்ள சாண்டிநல்லா வள்ளுவர் நகர் பகுதி ஓடையில் 50 ஆயிரம் சாதா கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தினை கலெக்டர் அருணா துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பிரதமமந்திரி மீன் வளமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 2 லட்சம் சாதா கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பைக்காரா ஓடை புனித் நகர்,டி.ஆர்.,பஜார் ஓடை, கிளன்மார்கன் ஓடை,ஜெயந்தி நகர்,தலைக்குந்தா ஓடை, கவர்னர் சோலை ஓடை ஆகிய பகுதிகளில் மீதமுள்ள மீன் குஞ்சுகள் விடப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓடைகளில் மீன் வளம் பெருகி மீனவர்கள் மீன் பிடிப்பை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதாரம் உயர வழிவகை ஏற்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்நிகழ்வில், பவானிசாகர் (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் தில்லைராஜன்,பவானிசாகர்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கதிரேசன்,சோலூர் பேரூராட்சி தலைவர் கௌரி,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஜோதிலட்சுமணன், மீன்வள ஆய்வாளர்கள் சில்பா,ஆனந்த்,பயிற்சி மீன்வள ஆய்வாளர்கள்,பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள்,பங்கு மீனவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு