சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000 பேருக்கு நலத்திட்ட உதவி: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழங்கியது

சென்னை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சைதை பகுதி பழையபொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 77வது சுதந்திர தின கொடியேற்றுவிழா, சங்க அலுவலக திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு 1000 பேருக்கு அன்னதானம் மற்றும் ஏழை எளியவர்களுக்கு உதவிகள் வழங்கினார்.

மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தேசியக்கொடியை ஏற்றிவைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். உடன் சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, பழையபொருள் வியாபாரிகள் சங்கத்தலைவர் இ.எம்.ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது