3 ஆண்டுக்குப்பின் நடந்த பாரம்பரிய விழா; 300 ஆட்டுக்கிடாய்களை வெட்டி மண் பானையில் அறுசுவை விருந்து: 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

சிவகங்கை:சிவகங்கை அருகே வேளாங்கபட்டி கிராமத்தில் ஆயி அம்மன், மாரநாட்டுக் கருப்புசாமி, கட்டுச்சோறு கருப்பு கோயில் ஆனி களரி பொங்கல் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 32 கிராமங்களை சேர்ந்த மக்கள் விரதத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் பொங்கல் வைப்பதற்காக ஒருவருக்கு 7 பானைகள் என 360 மண்பானைகளை கோயிலுக்கு எடுத்து ெசல்லும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் கோயில் வளாகத்தில் மண்பானைகளில் முதலாவதாக ஆயிஅம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து மாரநாடு கருப்புசாமிக்கும், கட்டுச்சோறு கருப்புக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்து பச்சரிசி பொங்கல் வைக்கப்பட்டது. இதையடுத்து நள்ளிரவில் பக்தர்களால் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 300 ஆடுகள் பலியிடப்பட்டன. இந்த ஆட்டுக்கறியை மண்பானையில் வைத்து சமைத்து, நேற்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தி சமைத்த உணவை, 360 மண்பானைகளில் வைத்து பக்தர்கள் தலையில் சுமந்து 4 கிமீ தொலைவில் உள்ள சாப்பாட்டு பொட்டலில் இறக்கி வைத்தனர். விழாவில் பங்கேற்ற பங்காளிகள் மற்றும் 32 கிராமங்களைச் சேர்ந்த 5,000 பேருக்கு உணவு பரிமாறப்பட்டது. 3 வருடங்களுக்கு பிறகு நடந்த இந்த பாரம்பரிய திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது