14 வயது சிறுவன் பைக் ஓட்டியதால் தந்தைக்கு ரூ.25,000 அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பைக் ஓட்டிச் சென்ற 14 வயது சிறுவனின் தந்தைக்கு போலீசார் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் நகர் பாலகிருஷ்ணாபுரம் மேம்பால பகுதியில் தாலுகா போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த சிறுவனை மடக்கி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த சிறுவன் பாலகிருஷ்ணாபுரம் சிறுமணி நகரை சேர்ந்த கோபி என்பவரின் 14 வயது மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். 18 வயது பூர்த்தியடையாத சிறுவனை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்த குற்றத்திற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்

மலபார் கோல்டு & டைமண்ட்ஸில் நுவா டைமண்ட்ஸ் கலெக்ஷன்: கரீனா கபூர் கான் வெளியிட்டார்

திருவண்ணாமலைக்கு கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை; வழக்கில் இருவர் பிடிபட்டனர்: பேஸ்புக் காதலனுக்கு வலை