தந்தையை வேன் ஏற்றி கொன்ற வழக்கில் தலைமறைவான மகன் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கதில் சொத்து பிரச்னையில் தந்தையை வேன் ஏற்றிக் கொன்று தலைமறைவான மகனை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம் பாலீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (63). இவரது மகன் வெங்கடேஷ் (28). சொந்தமாக வேன் ஓட்டி வந்தார். ராஜேந்திரனுக்கும், வெங்கடேஷுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரனை வெங்கடேஷ் வேன் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து, பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான வெங்கடேஷை தேடி வந்தனர். இதனிடையே, பாரிவாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த வெங்கடேஷை போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது தவறி விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு