ஃபேஷன் தொழில்நுட்ப கல்லூரியில் குரூப் சி பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Assistant (Admin): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் மற்றும் ஆங்கிலம்/இந்தியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
2. Machine Mechanic: 2 இடங்கள் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ மெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி.
3. Assistant (Finance & Accounts): 1 இடம் (பொது). வணிகவியல் பிரிவில் (பி.காம்.,) பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிதி மற்றும் அக்கவுன்டில் 2 வருட பணி அனுபவம்.
4. Assistant Warden (Girls): 1 இடம் (பொது). தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
5. Stenographer Grade- III: 1 இடம் (பொது). தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேஷனில் நல்ல அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதவும், 40 வார்த்தைகள் டைப்பிங் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
6. Nurse: 1 இடம் (பொது). தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் படிப்பை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
7. Junior Assistant: 11 இடங்கள் (பொது-6, எஸ்சி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 30 வார்த்தைகள், இந்தி 25 வார்த்தைகள் டைப்பிங் செய்யவும் மற்றும் கம்ப்யூட்டர் திறன் பெற்றிருக்க வேண்டும்.
8. Lab Assistant: 9 இடங்கள் (பொது-6, எஸ்சி-1, ஒபிசி-2). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Apparel Manufacturing Technology/Sewing Technology/Fashion Design and Technology பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி.
9. Library Assistant: 1 இடம் (பொது). தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நூலக அறிவியலில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது மற்றும் சம்பளம்:

வயது: 27க்குள். சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.590/-. இதை NIFT, Patna என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nift.ac.in/patna/careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.3.2024.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்