அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது

சாம்ராஜ்நகர்: மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கு கருப்பு கொடி காண்பிப்போம் என எச்சரிக்கை விடுத்த விவசாய சங்கத்தினரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்த சம்பவம் சாம்ராஜ்நகரில் நடந்துள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.வெங்கடேஷ் சாம்ராஜ்நகரத்தில் அதிகாரிகளின் கூட்டம் நடத்த வருகிறார்.

கோமாலா நிலம் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத கல்குவாரிகள், விலையை குறைக்க தோல்வி கண்டுள்ளது என குற்றம்சாட்டிய விவசாய சங்கத்தினர் அமைச்சருக்கு கருப்பு கொடி காண்பிக்க போவதாக எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாம்ராஜ்நகர் நகர போலீசார் விவசாய சங்கத்தின் ஹொன்னூர் பசவண்ணா, ஹெக்கவாடி மகாதேவய்யா, பன்யதஹூண்டி குமார், சிவமூர்த்தி ஆகியோரை காகலவாடி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து பின்னர் விடுதலை செய்தனர்.

Related posts

மகள் காதல் திருமணம் தந்தை தற்கொலை

அண்ணாமலைக்கு பாஜ கவுன்சிலர் கொலை மிரட்டல்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரும் வழக்குகளில் அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு