காட்டு யானை தாக்கியதில் விவசாயி சாவு

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி அடுத்துள்ள பனசுமான்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பரமேஷ் (46). மனைவி கவிதா. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று காலை பரமேஷ், தனது விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் பனசுமான் தொட்டி கிராம பகுதியில் சுற்றித்திரிந்தது. யானைகளை கண்டதும் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

அப்போது ஒரு காட்டு யானை, விவசாயி பரமேஷை துரத்தி சென்று தாக்கி தூக்கி வீசி காலால் மிதித்துக் கொன்றது. தகவல் அறிந்து ஜவளகிரி வனத்துறையினர் சென்று விசாரித்தனர். அப்போது சடலத்தை எடுக்க விடாமல் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related posts

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை