விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. டெல்டா மாவட்டங்களில் ரூ.1,170 கோடியில் வேளாண் தொழில் வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கின!!

சென்னை : டெல்டா மாவட்டங்களில் ரூ.1,170 கோடியில் வேளாண் பெரு தொழில் வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழ்நாடு அரசு, வேளாண் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை ஊக்குவிக்க வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க அனுமதி அளித்தது. அதன்படி, ரூ.1,170 கோடியில், வேளாண் பெரு தொழில் வழித்தடம் அமைக்கும் பணிகளை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தொடங்கி உள்ளது.

இந்த திட்டத்தை தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து மேற்கொள்ள உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், தொழிற்பேட்டைகள், கிடங்குகள், சாலை வசதிகள் ஏற்படுத்துவதோடு, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் உணவு தொழில் பூங்கா, குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!

லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பொன்னை அணையில் 10 செ.மீ மழை பதிவு: திடீரென்று மாறியது பருவநிலை