விவசாயிடம் ₹1000 லஞ்சம் வாங்கிய 2 வேளாண் அலுவலர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கொணலையை சேர்ந்தவர் அசோக்குமார். விவசாயியான இவர், சித்தப்பா பெயரில் வாங்கிய டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக சான்றிதழ் வழங்க கோரி கடந்த 2007 ஆகஸ்ட் மாதம் மண்ணச்சநல்லுார் வேளாண்மை வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த வேளாண் அலுவலர் நாகராஜன் ₹1000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதை அலுவலகத்தில் இருந்த உதவி அலுவலர் சின்னத்துரை மூலம் வேளாண் அலுவலர் நாகராஜனிடம் ₹1000 லஞ்சமாக அசோக்குமார், கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இறுதி விசாரணை நேற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக வேளாண்மை அலுவலர் நாகராஜனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6மாதம் சிறை தண்டணை மற்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் விதித்தார். இதே போல் உதவி வேனாண் அலுவலர் சின்னதுரைக்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும், இந்த அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டணையும் விதித்து உத்தரவிட்டார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி