ரூ.20 கோடி மோசடி குடும்பமே சிக்கியது

திருப்பூர்: மதுரையை சேர்ந்தவர் முத்தையன் (48). இவர் திருப்பூர் குமார் நகரில் குடும்பத்துடன் தங்கி பி.என்.ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி, முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாக கூறி விளம்பரம் செய்தார். இதை நம்பி கடந்த 2018 முதல் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். இவர்களுக்கு அறிவித்தபடி வட்டியுடன் பணம் கொடுக்கவில்லை. திடீரென நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகினர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 120க்கும் மேற்பட்டவர்களிடம், அதிக வட்டி கொடுப்பதாக கூறி ரூ.20 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்தையன், அவருடைய மனைவி மஞ்சு (47), மகன் கிரண்குமார் (22) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் 8 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு