கன்னியாகுமரியில் குடும்ப தகராறால் விபரீதம்: மகன் வீசிய பைக்கினை எடுக்க கிணற்றுக்குள் இறங்கிய தந்தை விஷவாயு தாக்கி பலி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மகன் வீசிய பைக்கினை எடுக்க கிணற்றுக்குள் இறங்கிய தந்தை உள்ளிட்ட 2 பேர் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சுகிராமம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த ஸ்ரீலிங்கம் என்பவருக்கும் அவரது மகன் செல்வாவுக்கும் இடையே நேற்று நள்ளிரவு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த செல்வா தனது இரு சக்கர வாகனத்தை அங்குள்ள சுற்றுசுவர் இல்லாத கிணற்றுனுள் தள்ளிவிட்டுள்ளார்.

இதை அடுத்து நள்ளிரவில் கிணற்றுள் விழுந்த இரு சக்கர வாகனத்தை எடுக்க ஸ்ரீலிங்கம் கயிறுகட்டி உள்ளே இறங்கியபோது விஷவாயு தாக்கியதால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற செல்வன் என்பவரும் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகி பலியானார். தகவலறிந்து வந்த கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அதிகாலை இருவரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி