அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரிசி அட்டை வைத்திருந்தவர்களிலேயே பலருக்கு பரிசுத் தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசாக பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கபடும் என அறிவிக்கபட்டிருந்தது. இந்த ரூ.1000 அரிசி அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கபட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வருடாவருடம் பொங்கல் பண்டிகைக்கு அரசு தரப்பில் இருந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அரிசி அட்டை தாரர்களுக்கு பொங்கள் பரிசுத் தொகுபுடன் ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து பொங்கல் பரிசு தொகுபுக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யபட்டது. அதில் கடந்த காலத்தில் அரிசி அட்டை வைத்து பொங்கல் பரிசு பெற்ற பலருக்கும் இவ்வாண்டு கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர். அரிசி அட்டை வைத்திருந்தவர்களிலேயே பலருக்கு பரிசுத் தொகைக்கான டோக்கன் மறுக்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?