30 அடி உயரத்திலிருந்து விழுந்த ஊழியருக்கு எழும்பு முறிவு நிவாரண தொகை வழங்க கோரி தொழிற்சாலை முற்றுகை: போலீசார் சமரசம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கெட்டனமல்லி ஊராட்சி உள்ள தனியார் தொழிற்சாலையில் மேற்கூரையில் கீழே விழுந்து பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவத்தில், நிவாரணத் தொகை வழங்க கோரி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி மின் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பல ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட 14வது வார்டு வெட்டு காலனி பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(27) என்ற வாலிபர் மேற்கண்ட தொழிற்சாலைக்கு மேற்கூரை மாற்றுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் கடந்த வாரம் சென்று இருந்தார். அப்போது, திடீரென மேற்கூரை உடைந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து கை, கால், முதுகு முறிவு ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த மணிமாறனை கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் மணிமாறனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் தொழிச்சாலை முன்பு நிவாரண தொகை வழங்க கோரி கோஷங்கள் எழுப்பியவாறு நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அறிந்த கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திறகு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சாலை நிர்வாகத்திடம் போலீசார் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி