போலி டாக்டர் நர்ஸ் கைது

சென்னை: தமிழக – ஆந்திர எல்லை பகுதியான ஆரம்பாக்கத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் ஒருவர் கடந்த ஒரு வருடமாக சிகிச்சை அளித்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அதிகாரிகள் நேற்று அந்த கிளினிக்கில் சோதனை நடத்தினர்.

அப்போது, காளிமுத்து (27) என்பவர், மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. அவருக்கு உதவியாக போலி செவிலியர் பாத்திமா (25) என்பவர் பணிபுரிந்தது தெரிந்தது.  தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீசார் போலி மருத்துவர் காளிமுத்து மற்றும் பாத்திமா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு