போலி சான்றிதழ் மூலம் அரசு பணி: 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை: முறைகேடாக அரசுப்பணி பெற்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 9 பேர் மீதும் ஊழல் தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. தொலைதூர கல்வியில் நடந்த முறைகேடு பற்றி 2020ல் துணைவேந்தர் உயர்கல்வித்துறை செயலருக்கு அறிக்கை அனுப்பினார். அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலி ஆவணங்கள் மூலம் அரசு பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற கிளை இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டது. 2012 முதல் 2019 ஆண்டு வரை தொலைதூர கல்வி முலம் 4 பேர் தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலியான பட்டம் பெற்றது தெரிய வந்தது. விசாரணையில் TNPSC முலம் அரசு பணிக்கு தேர்வு! செய்யப்பட்டு பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. வணிகவரி உதவி ஆணையர் சொப்னா, டிஎஸ்பி சதீஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் என்.ஏ.சங்கீதா மீதும் லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. உடந்தையாக இருந்த தொலைதூர கல்வி நிலைய அதிகாரிகள் சத்தியமூர்த்தி, புருஷோத்தமன் உள்பட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

கோவை அவிநாசி சாலையில் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!!

ஓசூர் அருகே மாநில எல்லையில் புற்றீசல் போல் பெருகி வரும் பட்டாசு கடைகள்

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் குவிந்து கிடக்கும் வாகனங்கள்