போலி பட்டா: மதுரை ஆட்சியர் ஆஜர்

மதுரை: போலி பட்டா விவகாரத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையை சேர்ந்த சாவித்ரி மற்றும் பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2012-ல் வழக்கு தொடர்ந்தார். மதுரையில் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை பேர் மீது நடவடிக்கை? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்டும் போலி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார். போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Related posts

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!