போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு உடந்தை: பாஜக நிர்வாகி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் ஐஏஎஸ் எனக்கூறி ஏமாற்றிய பெண், உடந்தையாக இருந்த பாஜக நிர்வாகி ரூபிநாத் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 வாரம் முன்பு ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி நெல்லை எஸ்.பி. அலுவலகத்துக்கு பாஜக நிர்வாகியுடன் மங்கையர்கரசி என்பவர் சென்றுள்ளார். தனது நண்பருக்கு துப்பாக்கி உரிமம் கேட்டு நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் மங்கையர்கரசி, ரூபிநாத் விண்ணப்பித்தனர். மங்கையர்கரசி, பாஜக நிர்வாகி ரூபிநாத் குறித்து விசாரிக்க நெல்லை மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். மங்கையர்கரசி ஐஏஎஸ் அதிகாரி என்றும் உ.பி. மாநில கல்வித்துறையில் உதவி செயலாளராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மங்கையர்கரசி போலி கல்வித்துறை உதவி செயலாளர் என்றும் பொது ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்ததும் தெரியவந்தது. மங்கையர்க்கரசி, ரூபிநாத் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்