மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை: பரூக்

பெங்களூரு: மக்களுக்கு அரசியலமைப்பு சட்ட புரிதலை ஏற்படுத்தும் விதமாக கர்நாடக அரசு அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு மாநாட்டை நடத்தி வருகிறது. அதில், கலந்துகொண்டு பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் ஸ்ரீநகர் தொகுதி எம்.பி பரூக் அப்துல்லா பேசியதாவது:
இன்றைக்கு அரசியலமைப்பு சட்டமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

எனவே அரசியலமைப்பு சட்டத்தை பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் அதை செய்யத் தவறினால், வரும் காலத்தில் வருத்தப்பட நேரிடும். என்றைக்கோ வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நினைத்து இப்போது வருத்தப்படுகிறோம். இன்றைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

*அடுத்த 3 மாதம் மன் கி பாத் இல்லை
புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி, அடுத்த மாதம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும் வாய்ப்புள்ளதால் அடுத்த 3 மாதத்திற்கு மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படாது என பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். தேர்தல் முடிந்த பிறகு 111வது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது