சவுக்கு காட்டுக்குள் பயிற்சி நிலையம் சாலை,மின் விளக்கு வசதிகள் வேண்டும்

*மாணவர்கள் வேண்டுகோள்

மண்டபம் : அரியமான் கடற்கரை பகுதியில் சவுக்கு காட்டுக்குள் அமைந்துள்ள மீன்பிடித் தொழில் நுட்ப பயிற்சி நிலையத்திற்கு, சாலை மற்றும் மின் வசதிகள் அமைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மண்டபம் அரியமான் கடலோரப் பகுதி அருகே ஜெ.ஜெயலலிதா மீன் வளம் பல்கலைகழகம் நிர்வாகத்தின் கீழ் மீன்வள தொழிநுட்ப பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பயிற்சி நிலையம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலேயும், வர்த்தகம் நிறுவனங்கள் இல்லாத பகுதியில், அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சவுக்கு காட்டுக்குள் அமைந்துள்ளது.

இந்த பயிற்சி நிலையத்திற்கு செல்வதற்கு சாலைகள் கிடையாது. மின் வசதிகளும் கிடையாது. பயிற்சி நிலையத்திற்கு சவுக்கு காட்டுக்குள் தற்காலிகமாக கரடு முரடான சாலைகளை அமைத்து மாணவ,மாணவிகள் சென்று வருகின்றனர்.இதனால் பெரும் அச்சத்துடன் மாணவ,மாணவிகள் செல்வதால், இந்த பகுதியில் தார்ச்சாலை, மின் விளக்குகள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ,மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு