பேஸ்புக் நேரலையில் சிவசேனா தலைவரின் மகன் சுட்டுக் கொலை: மும்பையில் பயங்கரம்

மும்பை: உத்தவ் அணிசிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் வினோத் கோசல்கர். முன்னாள் எம்எல்ஏ. இவரது மகன் அபிஷேக் கோசல்கர். இவர், மும்பையின் தஹிசார் பகுதியில் நேற்று, மொரிஸ் பாய் எனப்படும் மொரிஸ் நோரோன்ஹாவுடன் பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்ததும், மொரிஸ் கேமராவை விட்டு நகர்ந்து சென்ற நிலையில், திடீரென அவர் துப்பாக்கியால் அபிஷேக் கோசல்கரை சரமாரியாக சுட்டார். இந்த பயங்கர காட்சிகள் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அபிஷேக்கை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மொரிஸ் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில்தான் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. மொரிஸ், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்