முகம் அழகு கொடுக்கும் முட்டைக்கோஸ்!

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு மூலமாகவே நமது அழகை கூட்டமுடியும். அளவு(டயட்) என்பது மிகமிக அவசியம். உணவில் தாதுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறி, பழங்கள், அதிகம் சாப்பிட வேண்டும்.
*முட்டைக்கோஸ் சாறு, சிறிதளவு ஈஸ்ட் ஒரு ஸ்பூன், தேன் மூன்றையும் கலந்து இருபது நிமிடம் முகத்தில் தடவி மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.
*ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவினால் உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.
*பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும். பூசணிக்காயை சிறு துண்டு களாக்கி அதை கண்களை சுற்றி வைத்தால் கருவளையம் மறையும்.
*இரண்டு ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் இரண்டு ஸ்பூன் மோர் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் வெப்பத்தினால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.
*உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
*புளித்த மோரை முகத்தில் பதினைந்து நிமிடம் தடவி, மிதமான வெந்நீரில் கழுவினால் முகம் பொலிவாகும். பதினைந்து நாள் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
*முழங்கை கருப்பாகவும் சொர சொரப்பாகவும் இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து தடவி வர மிருதுவாகும்.
*ரோஜாப்பூ இதழ்களை அரைத்து அதோடு பால், பச்சைப் பயிறு மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வந்தால் சருமம் பளபளக்கும். மிருதுவாகவும் ரோஸ் நிறத்துடன் முகம் இருக்கும்.
*வெள்ளரிச்சாறு, சந்தனப் பொடி, கடலை மாவு மூன்றையும் சமஅளவு கலந்து முகம், கை, கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் பளிச்சென இருக்கும்.
*சந்தனம், முல்தானி மெட்டி கலந்த பேஸ்பாக் உபயோகித்து வர முகம் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறும்.
*கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி அது காய்ந்ததும் மிதமான சுடு நீரில் கழுவ முகம் மிருதுவாகும்.
– காகை
ஜெ. ரவிக்குமார்

Related posts

உலக புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: 2வது நாளாக நடந்த தேரோட்டத்தில் லாட்சக்கணக்கானோர் பங்கேற்பு

பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வெளியேறும் கழிவுநீர்

விடுமுறை நாளில் வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்