ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், தனது இ-சைக்கிள் பிராண்டான ஹீரோ லெக்ட்ரோவில் இருந்து, புதிய சைக்கிளை களம் இறக்கியுள்ளது. எப்6ஐ என்ற இந்த இ – சைக்கிள் சிவப்பு மற்றும் கருப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு கலந்த வண்ணங்களில் கிடைக்கிறது. 250வாட்ஸ் பிஎல்டிசி ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ. எல்இடி டிஸ்பிளே, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஆர்எப்ஐடி லாக், புளூடூத் இணைப்பு கொண்டது. 36வி லித்தியம்அயன் பேட்டரி உளளது. எடுத்துச் சென்று சார்ஜ் செய்யலாம். 5 – 6 மணி நேரத்தில் சார்ஜ் முழுமையாக ஏறிவிடும். விலை சுமார் ₹49,000….